Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு- கிழக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் 65,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகள் ஐந்து வருடங்கள் நிலைத்து நிற்கும் உறுதி கொண்டவையா?, என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

வடக்கு- கிழக்கின் காலநிலைக்கு ஒவ்வாத வீடுகளாக அவை காணப்படுவதாகவும், அதன் உறுதித் தன்மை கேள்விக்குள்ளானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு- கிழக்கில் 65,000 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளபோதும். 137,000 வீடுகளுக்கான தேவையிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. இந்திய அரசாங்கமும் வீடுகள் வழங்க உறுதியளித்துள்ளதாக கூறப்பட்டது.

வீட்டுத் திட்டம் தொடர்பில் சிக்கல் உள்ளது. இந்திய வீடுகளுக்கு தலா 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் திட்டமிட்டுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் 21 இலட்சம் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய வீடுகளை விட 3 மடங்காகும். இதனை கொண்டு 2 வீடுகள் நிர்மாணிக்க முடியும்.

எமது மக்களுக்கு வீடுகள் தேவை. அவர்களுக்கு இலவசமாக வீடுகள் அமைப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். மக்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். அரசாங்கம் வழங்கும் வீடுகளுக்கு தளபாடங்கள், சூரிய சக்தி நீர் வசதி என்பன வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் சரியான பெறுமதி தெரியாதுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படவுள்ளன. இந்த வீடுகள் 5 வருடங்கள் கூட நிலைக்குமா என்பது சந்தேகமே. இவற்றின் தரம் தொடர்பில் பிரச்சினை இருக்கிறது. இந்தத் திட்டம் தொடர்பில் அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு- கிழக்கில் அரசாங்கம் அமைக்கும் வீடுகள் 5 வருடங்கள் தாங்குமா?: சுமந்திரன் கேள்வி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com