தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரும் வரை நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட முடியாது. ஆனாலும், அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் எண்ணம் ஏதும் தற்போதைக்கு இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்றில் காணாமற்போனோரின் உறவினர்கள் நேற்று புதன்கிழமை நடத்திய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளதாவது, “காணாமற்போனோர் தொடர்பான விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலிலே முதலிடத்தை வகிக்கின்ற ஒன்றாகும். அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாம் அக்கறையோடு இருக்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது என்ற உண்மை அரசாங்கத்தால் கண்டறிந்து சொல்லப்படும்வரை, மக்களோடு இணைந்து செயற்படுவோம். அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம்.
கடந்த கொடூரமான ஆட்சியின் கீழ் எந்த விதத்திலும் தமிழர்கள் தழைக்கமுடியாது என்ற காரணத்தினாலேயே ஆட்சி மாற்றத்திற்கு முழுமையான ஆதரவை தெரிவித்தோம். தமிழ் மக்களது தேவைகள் பூர்த்திசெய்யப்படாத நிலையில், அவை தீரும்வரை இந்த அரசாங்கத்திலும் பங்காளிகளாக இருக்க முடியாது என்பதால் அரசாங்கத்திற்கு வெளியே இருந்து ஆதரவு தெரிவித்து வருகின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரும் வரை த.தே.கூ அரசின் பங்காளியாகாது: எம்.ஏ.சுமந்திரன்