அண்மையில் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளானதால் மூடப் பட்ட புருஸ்ஸெல்ஸ் விமான நிலையம் தொழிநுட்ப அடிப்படையில் திறக்கப் படத் தயார் நிலையில் இருப்பதாக வியாழக்கிழமை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மார்ச் 22 ஆம் திகதி தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான விமான நிலையம் வெள்ளிக்கிழமை மாலை முதல் பயணிகள் சேவைக்காக ஒரு பகுதியாகத் தொழிநுட்ப அடிப்படையில் திறக்கப் படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
அண்மையில் பாரிஸ் நகரை உலுக்கிய தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் கைது செய்யப் பட்ட சந்தேக நபரும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவனுமான சாலாஹ் அப்டெஸ்லாம் என்பவன் பிரெஞ்சு அதிகாரிகளுடன் இணங்கி நடப்பதாக அறிவித்த பின்னரே இம்முடிவை புருஸ்ஸெல்ஸ் நிர்வாகம் எடுத்துள்ளது. 4 மாதங்களுக்கு முன்னர் தான் பாரிஸ் நகரில் வெவ்வேறு இடங்களில் நடத்தப் பட்ட தீவிரவாதத் தாக்குதல்களில் 130 பேர் வரை கொல்லப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முக்கிய குற்றவாளியான அப்டெஸ்லாம் தப்பி ஓடிய போதும் 4 மாத வேட்டைக்குப் பின் மார்ச் 18 அம் திகதி புருஸ்ஸெல்ஸில் வைத்து கைது செய்யப் பட்டிருந்தான்.
இந்நிலையில் விமான நிலையத்தின் பாரிய பகுதி முற்றாகத் திருத்தப் படாத நிலையில் ஒரு மணித்தியாலத்துக்கு 800 பயணிகளை உள்வாங்கும் விதத்தில் அது திறக்கப்படவுள்ளது. ஒரு வருடத்தில் புருஸ்ஸெல்ஸ் விமான நிலையத்தில் இருந்து 2.5 மில்லியன் பேர் வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுச் செல்வதாகக்கணிக்கப் பட்டுள்ள நிலையில் தற்போதைய நிலையில் இது வெறும் 20% வீதமே என அறிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வருடத்துக்கு சுமார் 23.5மில்லியன் பயணிகளையும் 489 000 டன் சரக்குகளையும் பயணிக்கச் செய்யும் ஐரோப்பாவின் மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றான புருஸ்ஸெல்ஸ் விமானநிலையம் பெல்ஜியத்தின் தலைநகரத்தில் இருந்து 226 முக்கிய நகரங்களுக்கு 77 வெவ்வேறு விமான சேவை நிறுவனங்களைக் கொண்டு இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தொழிநுட்ப அடிப்படையில் மீளத் திறக்கத் தயார் நிலையில் புருஸ்ஸெல்ஸ் விமான நிலையம்!