குடிவரவு சட்டங்களை மீறி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தரான குமார் குணரட்னத்துக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியப் பிரஜையான குமார் குணரட்னம் குடிவரவு சட்டங்களை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த வருடம் கைது செய்யப்பட்டிருந்தார். அவர், மீதான வழக்கு விசாரணைகள் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
இந்த நிலையிலேயே, இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசாரணைகளின் முடிவில் குமார் குணரட்னத்துக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

0 Responses to குமார் குணரட்னத்துக்கு ஒரு வருட சிறை!