Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்து வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நேர்காணலை பாதியில் முடித்துக்கொண்டு கிளம்பினார்.

தேமுதிகவை கூட்டணிக்கு இழுக்க, திமுக 500 கோடி ரூபாய் 80 தொகுதிகள் என்று பேரம் பேசியதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து திமுக சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி, வைகோவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதுக் குறித்து தனியார் செய்தித் தொலைகாட்சி ஒன்றுக்கு வைகோ நேர்காணல் அளித்து வருகையில், அந்த புகார் தகவல் உண்மையின் அடிப்படையில் கூறப்பட்டது என்றும், நாளிதழ்களில் வெளியான செய்தி என்றும் வைகோ கூறினார்.

அதிமுகவுடன் நீங்கள் ஆயிரத்து 500 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு, மக்கள் நலக் கூட்டணியை அமைததகக் கூறப்படுகிறதே என்று ஊடகவியாளர் கேள்வி கேட்டபோது கொதிப்படைந்த வைகோ, நான் இந்த நேர்காணலை முடித்துக் கொள்கிறேன் என்று கூறி, மைக்கை கழற்றிவிட்டு கிளம்பிவிட்டார்.


0 Responses to நேர்காணலை பாதியில் முடித்துக்கொண்டு சென்றார் வைகோ!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com