Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டிலிருந்த 177 ஏக்கர் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த சம்பூர் மகா வித்தியாலயம் மற்றும் இந்து ஆலயம் என்பனவும் பொதுமக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளும் இன்று உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டன. இவ் வீடுகளை கனடா தமிழ்ப் பேரவையினால் நிர்மாணிக்கப்பட்டு 18 பேருக்கான வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இறுதி யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, கடந்த 2006ஆம் ஆண்டு முதல் அகதி முகாம்களில் தங்கியிருந்த நிலையில் தற்போது அவர்களுக்கு சொந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

0 Responses to சம்பூரில் கடற்படையின் கட்டுப்பாட்டிலிருந்த 177 ஏக்கர் காணி பொதுமக்களிடம் மீளக் கையளிப்பு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com