Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மியான்மாரின் புதிய அதிபராக புதன்கிழமை 69 வயதாகும் ஹிதின் கியா பதவியேற்றுக் கொண்டார்.

தேசிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும் மியான்மார் புரட்சித் தலைவி மற்றும் நோபல் பரிசு வென்றவருமான ஆங் சான் சூ குயி இன் நெருங்கிய உதவியாளருமான இவர் பதவியேற்றுக் கொண்டமைக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஒபாமா தனது வாழ்த்துச் செய்தியில், மியான்மார் அரசியல் சகாப்தத்தில் இது ஒரு முக்கிய மைல் கல்லாகும். அதிபராகப் பதவியேற்றுக் கொண்ட ஹிதின் கியாவுக்கு எனது வாழ்த்துக்கள். அமெரிக்கா இப்புதிய அதிபருடனும், புதிய அரசுடனும் இணைந்து செயற்படத் தயாராகவுள்ளது என்றார்.

மேலும் மியான்மாரின் புதிய அரசின் முன்னால், ஆட்சியை முன்னெடுத்துச் செல்வது, பொருளாதார வளர்ச்சியை அடைவது, தேசிய ஒருங்கிணைப்பு, மற்றும் அனைத்து மக்களுக்கும் சம அளவு சுதந்திரம் மற்றும் உரிமையை நிலை நிறுத்துவது என்பன போன்ற முக்கிய சவால்கள் காத்திருப்பதாகவும் ஒபாமா சுட்டிக் காட்டியுள்ளார். மியான்மாரில் கடந்த 50 ஆண்டு கால இராணுவ ஆட்சி முடிந்த பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜனநாயக முறைப்படி அதிபராகப் பதவியேற்றுக் கொண்டுள்ள ஹிதின் கியா இன்னமும் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பதவியில் நீடிப்பார். புதன்கிழமை பதவியேற்பு வைபவத்தில் துணைத் தலைவராக ஹென்றி வான் தியோ பதவியேற்றார்.

0 Responses to மியான்மாரின் புதிய அதிபராகப் பதவியேற்ற ஹிதின் கியாவுக்கு ஒபாமா வாழ்த்து!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com