Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜப்பானின் ஹிட்டோமி செய்மதி மாயமானது!

பதிந்தவர்: தம்பியன் 31 March 2016

ஜப்பானின் ஜக்ஸா விண்வெளி ஆய்வு மையத்தால் கருந்துளைகளில் இருந்தும் பிரபஞ்ச வெளிகளில் இருந்தும் வெளியாகும் X-ray கதிர்களை ஆராய்வதற்காக விண்ணில் செலுத்தப் பட்ட ஹிட்டோமி என்ற செய்மதி மாயமாகப் போயுள்ளது.

உயர் ரக தொழிநுட்ப வசதிகளுடன் தயாரிக்கப் பட்ட இந்த செய்மதியிடம் இருந்து பெறப்பட்டு வந்த தகவல்கள் திடீரென நின்று போயுள்ளது.

சனிக்கிழமை ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தால் விண்வெளிக் குப்பைகள் ஆய்வு செய்யப் பட்ட போது ஜப்பானின் ஹிட்டோமி செய்மதியின் உடைந்த 5 பாகங்களைக் கண்டதாகத் தெரிவித்திருந்தது. இதேவேளை குறித்த செய்மதி கட்டுப்பாட்டை இழந்து பூமியில் வீழ்ந்திருக்கலாம் எனவும் இதன்போது ஏற்பட்ட ஒளிப்பிழம்பினைத் தாம் அவதானித்ததாகவும் நேரில் பார்த்ததாக சிலர் தகவல் அளித்துள்ளனர்.

தற்போது இச்செய்மதி உடையாமல் இருக்கும் பட்சத்தில் அதைத் தேடும் முயற்சியில் இத்திட்டத்தில் இணைந்துள்ள நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகள் முயன்று வருகின்றன.

0 Responses to ஜப்பானின் ஹிட்டோமி செய்மதி மாயமானது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com