புதிய கூட்டணி உருவாக்கப்பட்ட நாளில் தேமுதிக அலுவலகத்தினுள் செய்தியாளர்கள் மறுக்கப்பட்டது செய்தியாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.
நேற்று, மக்கள் நலக் கூட்டணி தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்துகையில் செய்தியாளர்களுக்கு தேமுதிக அலுவலகத்தினுள் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், விஜயகாந்துக்குச் சொந்தமான கேப்டன் டிவிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இது தேமுதிகவின் வழக்கமான நடைமுறைதான் என்றாலும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவோம் என்று ஒன்று சேர்ந்த மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் எப்படி இதற்கு ஒத்துக்கொண்டார்கள் என்கிற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பி வருகின்றனர்.
திமுகவும் சரி, அதிமுகவும் சரி இதுவரை தங்களது கூட்டணி அறிவிப்பை செய்தியாளர்களை வைத்துக்கொண்டே அறிவிப்பார்கள், அதோடு, இரண்டு கட்சிகளின் அலுவலகத்தினுள் செய்தியாளர்கள் சுதந்திரமாக அனுமதி பெறுவது வழக்கம். இந்நிலையில் தற்போது விஜயகாந்த் கூட்டணியாக மாறி இருக்கும் மக்கள் நலக் கூட்டணி ஆரம்பத்திலேயே இவ்வளவு அலப்பரை செய்கிறார்கள், ஆட்சி அமைத்தால் செய்தியாளர்கள் எப்படி மதிக்கப்படுவார்களோ என்கிற அச்சத்தை செய்தியாளர்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் அரசியல் அனுபவம் வாய்ந்த வைகோ, நேற்று சிறு பிள்ளைத்தனமாக நடந்துக்கொண்டார் என்றும், விஜயகாந்த் தருமர் அவரை இனி ஒரு பயலும் நெருங்க முடியாது என்றும் பேசியுள்ளார் என்று மூத்த அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் விமர்சித்து வருகிறார்கள். மேலும், தருமரை நெருங்குவதற்கு முன்னர் முத்தரசன், ஜி.,ராமகிருஷ்ணன் ஆகிய நகுலன், சகாதேவனை அவர்கள் கடக்க வேண்டும், பின்னர் வைகோ,திருமா என்கிற அர்ஜுனன், பீமனைக் கடக்க வேண்டுமென்று கூறியுள்ளார். எவரும் வாய்க்கு வந்தபடி விஜயகாந்தை விமர்சிக்க முடியாது என்றும் வைகோ கூறியுள்ளார்.
அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று மூத்த அரசியல்வாதியான வைகோவுக்குத் தெரியாதா என்ன என்று பொது மக்கள், அரசியல்வாதிகள், பத்திரிக்கை அன்பர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

0 Responses to புதிய கூட்டணி உருவாக்கப்பட்ட நாளில் செய்தியாளர்களுக்கு மறுப்பு