Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் பொருளாதாரத்தையும், பாதுகாப்பையும் காப்பாற்ற முடியாவிட்டால் நல்லாட்சி அரசாங்கம் பதவி விலகிச் செல்ல வேண்டும் என்று கூட்டு எதிரிணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொருளாதாதார ரீதியில் அரசாங்கம் படுமோசமான நிலையில் உள்ளது. வரலாறு காணாத அளவிற்கு நாட்டில் பணவீக்கம் ஏற்பட்டு ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கண்டுள்ளது.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பேசி காலத்தை வீணடிக்காது அரசாங்கம் பொது மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும். 20வது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வந்தால் அதற்கு ஆதராவாக நாங்கள் செயற்படுவோம். இதனை 19வது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வந்த போதே நாங்கள் உறுதிபட கூறி விட்டோம்.

ஆனால், அரசாங்கம் கூட்டு எதிரணி மீது அடக்குமுறைகளையே கட்டவிழ்துள்ளது. இதனை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. மக்களின் தலைமைத்துவத்துடன் தற்போதைய அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம்.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டைப் பாதுகாக்க முடியாவிட்டால் நல்லாட்சி அரசாங்கம் பதவி விலக வேண்டும்: திஸ்ஸ விதாரண

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com