Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் எவ்வாறான அவசர நிலை ஏற்பாட்டாலும், அதனைச் எதிர்கொள்ளும் வல்லமை இராணுவத்திற்கு உண்டு என்று யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி பகுதியில் நேற்று புதன்கிழமை வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்நிலையில், முழுமையான விசாரணைகளின் பின்னரே, கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் நோக்கங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், இராணுவத்தினர் மூலோபாய ரீதியாக தயார் நிலையில் இருப்பதாகவும் யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to அவசர நிலைகளை எதிர்கொள்ளும் வல்லமை இராணுவத்திடம் உண்டு; யாழ். படைகளின் கட்டளைத் தளபதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com