நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கூட்டு எதிரணி (மஹிந்த ஆதரவு அணி) பாராளுமன்ற உறுப்பினர்கள் 37 பேரின் கையெழுத்தோடு சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சி, போலித் தகவல்களை வெளியிட்டு பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியமை உட்பட மேலும் சில காரணங்களை மையமாகக்கொண்டே ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தத் தீர்மானத்தினை விரைவில் விவாதத்துக்கு எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அடுத்த வாரமளவில் அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மஹிந்த அணியால் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிப்பு!