ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கல்லூரிக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஹைதராபாத் ஆராய்ச்சி பல்கலைக் கழக மாணவர் ரோஹித் வெமூலா தற்கொலை செய்துக் கொண்டதை அடுத்து, அங்கு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். எனவே, கடந்த இரண்டு மாதங்களாக கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு, மீண்டும் கல்லூரி திறந்த நிலையில், விடுப்பில் இருந்த பல்கலை துணை வேந்தர் மீண்டும் கல்லூரி வந்தார் என்றும், வெமூலாவை இடை நீக்கம் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி பதவி விலக வேண்டும் என்றும் மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கல்வி கெட்டுவிடும் என்று மாணவர்கள்; போராட்டத்தைக் கைவிட்டு கல்லூரிக்குச் செல்லத் திட்டமிட்டு உள்ளனர்.மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், கல்லூரி விடுதியில் தண்ணீர், மின்சார சப்ளையை நிறுத்தி வைத்திருந்த நிர்வாகம், இப்போது அவர்கள் போராட்டத்தைக் கைவிட அறிவித்த நிலையில், இரண்டையும் இன்று முதல் சப்ளை செய்து வருகிறது.

0 Responses to ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கல்லூரிக்குச் செல்ல முடிவு