Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திமுகவுடன் கூட்டணிக் குறித்த நேரடிப் பேச்சுவார்த்தை எப்போதும், எங்கும் நடைபெறவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து, தேமுதிக தேர்தலை சந்திக்கும் என்றும்,நிச்சயம் வெற்றிப்பெற்று கேப்டன் ஆட்சி அமைப்பார் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.தேர்தல் கூட்டணிக்கு திமுக தேமுதிகவுக்கு பேரம் பேசியதாக வைகோ தெரிவித்த கருத்துக் குறித்த கேள்விக்கு, திமுகவுடன் எங்கும், எப்போதும் பேச்சுவார்த்தை
நடைப்பெறவில்லை, தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று ஸ்டாலினும், கலைஞரும் கூறியதுதான் உண்மை என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே மூத்த அரசியல்வாதி என்றும், அவர் பலமுறை தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்ததற்கு இப்போதும் தாம் நன்றி சொல்வதாக கூறினார். மேலும், பிரகாஷ் ஜவடேகர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என்றும், அப்போது கூட்டணிக் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் பிரேமலதா கூறினார்.

மக்கள் நலக் கூட்டணி சார்பாக ஒருமுறை தேமுதிக அலுவலகத்தில் தலைவர்கள் கேப்டனை சந்தித்தார்கள் என்றும், இது தவிர வேறு யாருடனும் எங்கும் பேச்சுவார்த்தை நடைப்பெறவில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார் பிரேமலதா.

0 Responses to திமுகவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை எப்போதும் நடைபெறவில்லை: பிரேமலதா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com