ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் முயற்சிகளில் தலைவர்கள் ஈடுபடக் கூடாது என்று அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன கேட்டுக்கொண்டுள்ளார்.
கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பகிரங்கமாக கண்ணீர் விட்டு அழுத அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளதாவது, “நான் இன்னும் நீண்ட நாட்கள் உயிரோடு இருக்கப் போவதில்லை. எனினும், கட்சியின் மீதுள்ள அன்பில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை. இதன் காரணமாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கு அர்ப்பணிக்கின்றேன்.
கட்சியை இரண்டாக பிளவுபடுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கக் கூடாது. இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியுள்ளேன்.” என்றுள்ளார்.

0 Responses to சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த வேண்டாம்; டி.எம்.ஜயரட்ன வேண்டுகோள்!