Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லங்கையில் நீண்ட இனப்பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்படாமல், அதனைப் பந்தாடியமையாலேயே வடக்கில் ஆயுதப் போராட்டம் தலைதூக்கியதுடன், பிரபாகரன் ஆயுதமேந்தினார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடகப் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

டிலான் பெரேரா கூறியுள்ளதாவது, "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இனவாத, பிரதேசவாத, குலவாத செயற்பாடுகளுக்கு இனி ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். நாங்கள் கட்சியை விஸ்தரிப்பதற்காக பல்வேறு பகுதிகளிலும் அடிமட்ட கூட்டங்கள் மற்றும் இளைஞர் மாநாடுகளை நடத்தியிருந்தோம். அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் நாங்கள் வெற்றிகரமாக எமது செயற்பாடுகளை செய்திருந்தோம்.

இந்நாட்டில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும். பிரதான இரு கட்சிகள் இணைந்து செயற்படும் இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் எதிர்பார்க்கும் இலக்குகளை நாங்கள் அடையவேண்டும். கடந்த காலங்களில் பண்டா - செல்வா, டட்லி - செல்வா ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படாமல் காலம் தாமதிக்கப்பட்டன. இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற விடயத்தில் அரசியல்வாதிகள் பந்தாடிவந்தனர். அதனாலேயே வடக்கில் ஆயுத கலாசாரம் உருவாகியதுடன், பிரபாகரன் என்ற இளைஞர் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளை அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். அவ்வாறாயின், கடந்த காலங்களில் நடைபெற்ற வெற்றிகளையும் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனினும், யுத்த வெற்றி உள்ளிட்ட முக்கிய விடயங்களை மாத்திரம் ஒரு குடும்பத்துக்கு மாத்திரம் புகழை வைத்துக்கொள்ள முடியாது'' என்றார்.

0 Responses to இனப்பிரச்சினைக்கான தீர்வு பந்தாடப்பட்டமையாலேயே பிரபாகரன் ஆயுதமேந்தினார்: டிலான் பெரேரா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com