Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண ஆளுநர் பொறுப்பிலிருந்து ரெஜினோல்ட் குரே உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று ரெலோவின் செயலாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான என்.சிறீகாந்தா வலியுறுத்தியுள்ளார்.

“வடக்கு மாகாண சபையையும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றைக் கூட்டி வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே விமர்சித்துள்ளார். இது, நடைமுறைக்கு அப்பாற்பட்ட விடயம். அவரொரு அரச அதிகாரி, அவர் அரசியல் பேச முடியாது. அப்படிப்பட்ட நிலையில், அரசியல் ரீதியான விமர்சனங்களை விடுப்பது தவறானதாகும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வடக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து ரெஜினோல்ட் குரேயை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பகிரங்கமான வேண்டுகோளை விடுத்துள்ளோம் என்று என்.சிறீகாந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண ஆளுநர் பொறுப்பிலிருந்து ரெஜினோல்ட் குரே நீக்கப்பட வேண்டும்: என்.சிறீகாந்தா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com