வடக்கில் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் வேறு இடங்களில் தங்கியுள்ள மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பில் காணிகளை இனங்காணும் செயற்பாடுகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் (யூன் 03) நிறைவுக்கு கொண்டுவருமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இடம்பெயந்துள்ள மக்களை மீளக்குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. இதன்போதே, ஜனாதிபதி மேற்கண்ட பணிப்புரையைப் பிறப்பித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, காணி அமைச்சின் செயலாளர் ஐ.எச்.கே மஹானாம உள்ளிட்டவர்களும், முப்படைகள் மற்றும் அரச அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

0 Responses to வடக்கு மீள்குடியேற்றம்; எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் காணிகளை இனங்காணுமாறு மைத்திரி பணிப்பு!