இந்தியாவின் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் சீன இராணுவம் தனது படை பலத்தை அதிகரித்திருப்பதாக அமெரிக்கா இந்தியாவுக்கு அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பில் அமெரிக்க இராணுவத் தலைமையகம் பெண்டகன் வெளியிட்ட அறிக்கையில் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான்பின் குவாதர் பகுதியில் அமைக்கப் பட்டு வரும் துறைமுகம் மற்றும் சிறிலங்கா தலைநகர் கொழும்பிலுள்ள துறைமுகக் கட்டுமானம் ஆகியவை இப்பிராந்தியத்தில் உள்ள வல்லரசான இந்தியாவுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர திட்டத்துக்கு சீனாவுடன் பேசப்பட்ட ஒப்பந்தத்தில் அங்கிருக்கும் நிலப் பகுதி ஒன்றை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்க இரு தரப்பும் பேசி வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதேவேளை இந்திய சீன எல்லையில் குறிப்பாக அருணாச்சலப் பிரதேசம் மற்றும் காஷ்மீரின் அஸ்காய் சின் பிராந்தியம் என்பவற்றில் சீனா படைகளை அதிகமாகக் குவித்து வருவதாகவும் இதனால் இப்பகுதிகளில் பதற்ற நிலை அதிகரித்திருப்பதாகவும் அமெரிக்க இராணுவம் எச்சரித்துள்ளது. 1962 அக்டோபரில் சீன இந்திய எல்லைப் போரில் காஷ்மீரின் அக்சாய் சின் மற்றும் வடகிழக்கு மாநிலப் பகுதிகளில் தான் கடும் போர் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பெண்டகன் எச்சரிக்கையை அடுத்து இந்தியாவும் இந்த எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.
மறுபுறம் பெண்டகனின் அறிக்கை தொடர்பில் பீஜிங் நிர்வாகம் விசனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் அமெரிக்கா தலையிட்டு வரும் நிலையில் கிழக்கே சீன அரசுக்கு சொந்தமான எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை நிலை நாட்டுவதிலும் அத்துமீறி நுழைந்து அமெரிக்கா இந்தியாவைத் தூண்டியுள்ளது என சீனா சாடியுள்ளது. மேலும் பெண்டகனின் இவ்வாறான செயல்களால் சீன அமெரிக்க உறவில் பெரும் விரிசல் ஏற்படும் எனவும் பீஜிங் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to இந்திய எல்லையில் படைகள் குவிக்கவில்லை!: அமெரிக்க எச்சரிக்கைக்கு சீனா பதிலடி