அண்மையில் வெளியான நவீன பூகோள அடிமைத் தன புள்ளி விபரப் பட்டியலில் உலகளாவிய ரீதியில் 46 மில்லியன் மக்கள் அடிமைகளாகவும் இதில் இந்தியாவில் மட்டும் 18.35 மில்லியன் மக்கள் எண்ணிக்கையுடன் இந்தியா முதலிடத்திலும் உள்ளன.
அதாவது இந்தியாவில் சுமார் 18.35 மில்லியன் மக்கள் கட்டாய அடிமை வேலை, பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுப்பவர்களாக உள்ளனர் என இப்புள்ளி விபரம் கூறுகின்றது.
அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பான வாக் ஃப்ரீ அறக்கட்டளை சார்பாக இப்புள்ளி விபரம் வெளியிடப் பட்டது. இதில் குறிப்பிடப் பட்ட 45.8 மில்லியன் அகதிகளில் பெரும்பான்மை பெண்களும் குழந்தைகளும் அடங்குவதும் குறிப்பிடத்தக்கது. இதே இப்பட்டியல் 2014 இல் வெளியான போது 35.8 மில்லியன் மக்களே அடிமைகளாக இருந்துள்ளமை ஆச்சரியத் தக்க ஒன்றாகும். மேலும் 2014 இல் இந்தியாவில் 14.3 மில்லியன் மக்கள் அடிமைகளாக இருந்துள்ளனர்.
இந்தியாவுக்கு அடுத்த கட்டங்களில், சீனா 3.39 மில்லியன், பாகிஸ்தான் 2.13 மில்லியன், பங்களாதேஷ் 1.53 மில்லியன் மற்றும் உஷ்பெகிஸ்தான் 1.23 மில்லியன் எண்ணிக்கையிலும் உள்ளன. இக்கணக்கெடுப்பு சுமார் 167 நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப் பட்டதாகும்.

0 Responses to பூகோள அடிமைத் தன புள்ளி விபரத்தில் இந்தியா முதலிடத்தில்..