Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை முன்னெடுத்துள்ள நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்தங்களுக்கு நோர்வே தனது முழுமையான ஆதரவை வழங்கும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று செவ்வாய்க்கிழமை வந்தடைந்த டொரே ஹேடர்ம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "நோர்வே அரசியல் பேச்சுக்களை வலுப்படுத்த விரும்புகின்றது. இலங்கை அரசின் நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்த கொள்கைகளை ஆதரிக்க விரும்புகின்றது. வர்ததக ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஆதரிக்க விரும்புகின்றது. இலங்கையில் ஏற்படக்கூடிய சாதகமான அரசியல் முன்னேற்றங்களே இதனை சாத்தியமாக்கும்.

மேலும், இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்கள், உறவுகளை இழந்தவர்களுக்கு நோர்வே தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றது." என்றுள்ளது.

0 Responses to இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு நோர்வே பூரண ஆதரவளிக்கும்: டொரே ஹேடர்ம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com