Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சபாநாயகர் திரு.தனபால் தராசு முள்போல நடுநிலையுடன் செயல்படுவார் என்பதில் ஐயமில்லை என்று ஜெயலலிதா புகழாரம் சூட்டியுள்ளார்.

ஒரு சபாநாயகர் எப்படி எல்லாம் இருக்க வேண்டுமோ அப்படி கடந்த காலங்களில் திரு.தனபால் செயல்பட்டார் என்றும், இனி வரும் காலங்களிலும் தாங்கள் அப்படித்தான் செயல்படுவீர்கள் என்பதில் ஐயமில்லை என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.கட்சி சார்பின்றி சபாநாயகர் தராசு முள் போல நடுநிலையுடன் செயல்படுவார் என்றும் கூறிய ஜெயலலிதா, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையைப் பார்த்து தமது ஆட்சி செயல்பட்டதில்லை என்றும், எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் உரிய மரியாதையை எதிர்க்கட்சிக்கு அளித்து மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வோம் என்றும் கூறினார் முதல்வர்.

சபாநாயகர் தனபாலை ஒரு எதிர்க்கட்சித் தலைவராக தாம் அமரவைத்தது தமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் எதிரிக் கட்சியாக இல்லாமல், எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றும் ஸ்டாலின் மேலும் கூறியுள்ளார்.  இதையடுத்து சட்டப்பேரவை ஜூன் மாதம் 16ம் திகதி மீண்டும் கூடும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

0 Responses to சபாநாயகர் தராசு முள்போல நடுநிலையுடன் செயல்படுவார் என்பதில் ஐயமில்லை: ஜெயலலிதா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com