Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகச் சிறைகளில் கைதிகள் மரணம் தொடர்வதுத் தொடர்பாக தமிழக அரசின் அறிக்கை தேவை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

கடந்த 2000மாவது ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தமிழகச் சிறைகளில் ஆயிரத்து 95 கைதிகள் மரணம் அடைந்துள்ளனர் என்றும், இதற்குக் காரணம் இவர்களுக்கு .உடல்நல பாதிப்பு, தேவைக்கேற்ப சிகிச்சை மேற்கொள்ளாதது என்றும் வழக்கறிஞர் ஒருவர் பொது நல மனு தொடுத்து இருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர் குறிப்பிட்டுள்ளது போன்று சிறையில் கைதிகள் மரணம் எதனால், எத்தனைக் கைதிகள் மரணம் அடைந்தனர் என்பது போன்ற விளக்கங்களை உள்துறை முதன்மைச் செயலர் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பித்தனர்.

அந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், உள்துறை முதன்மை செயலர் தரப்பில் எதுவும் விளக்கம் அளிக்கப்படவில்லை என்றாலும், அரசு வழக்கறிஞர் தரப்பில் 264 கைதிகள் மரணம் குறித்த தகவல்கள் மட்டுமே சேகரிக்க முடிந்தது என்றும், மற்ற கைதிகளின் மரணம் குறித்தத் தகவல்களை சேகரிப்பதில் மாவட்ட நீதிமன்றங்களை ஒத்துழைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

உள்துறை முதன்மை செயலர் இதுக்குறித்த விரிவான விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அப்படி தாக்கல் செய்யாத பட்சத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை மாதம் 29ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

0 Responses to தமிழக சிறைகளில் கைதிகள் மரணம் தொடர்வது தொடர்பாக அறிக்கை தேவை: நீதிபதிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com