Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொஸ்கம - சலாவ இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய கால அவகாசம் தேவை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

சலாவ இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கில் நேற்று மாலை 06.30 மணியளவில் ஏற்பட்ட வெடிவிபத்தை அடுத்து ஏற்பட்ட தீ நேற்றிரவு பலமணி நேரமாகத் தொடர்ந்து எரிந்தது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 01.30 மணியளவிலேயே தீயினைக் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.

இந்த நிலையில், தீ விபத்துக்கான காரணத்தை கண்டறியும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.

0 Responses to இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கு தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய கால அவகாசம் அவசியம்..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com