கொஸ்கம – சலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து அங்கிருந்து இரு ஆயுதக் கிடங்குகள் முற்றாக வெடித்து அழிந்துள்ளன.
நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆட்டிலறி எறிகணைகள், பல்குழல் உந்துகணைகள் என ஆயுத தளபாடங்கள் முற்றாக வெடித்து நாசமாகியுள்ளன. இதனால் அப்பகுதி பெரும் புகை மூட்டமாகவும் தீ வெளிச்சமாகவும் காணப்பட்டது.
பல மணி நேரமாக இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் காரணமாக தீ பரவலாக எரிந்து வந்த நிலையில் தற்போது தீ முற்றாக கட்டுப்பட்டுள்ளது என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வெடிப்புச் சம்பவம் காரணமாக இராணுவ முகாமிற்குள் இருந்த கட்டிடங்கள் முற்றாகச் சேதம் அடைந்துள்ளன.
குறித்த வெடிவிபத்தில் ஒரு இராணுவ சிப்பாய் பலியானதுடன். மேலும் 47 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எறிகணைகள் மற்றும் பல்குழல் உங்துகணைகள் வெடித்த வெடிப்பு அதிர்வுகளால் முகாமை சுற்றி அமைந்திருந்த பிரதேசவாசிகளின் குடிமனைகளும் சேதமடைந்துள்ளன.
அத்துடன் முகாமை சுற்றி 6 கிலோமீற்றருக்குட்பட்ட மக்களை உடனடியாக வெளியேறுமாறு இராணுவத்தினால் அறிவுறுத்தப்படிருந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அப்பிரதேசத்திலிருந்து வெளியேறி அயலிலுள்ள கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
எனினும் தற்போது முகாமைச் சுற்றி ஒரு கிலோ மீற்றர் வரையில் பொதுமக்களை நுழைய வேண்டாம் என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
அத்துடன் சாலாவ தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இராணுவத்தினரும் கடற்படையினரும் பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் முன்னெடுத்தனர். இராணுவ முகாமை நெருங்க முடியாமல் இருப்பதாகவும் வேவு விமான மூலமாக வான் வழியாக நிலைமைகளை அவதானிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடு முறை வழங்கப்பட்டுள்ளது.
தீச் சம்பவத்தினால் அப்பிரதேசத்திலுள்ள வீடுகள் மற்றும் பாதை ஓரங்கள் என்பவற்றில் ஆயுதங்களின் பாகங்கள் சிதறிக் காணப்படுவதாகவும், பொது மக்கள் அவற்றை எடுக்கவோ அல்லது தொடவே வேண்டாம் என இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெடிபொருட்களின் பாகங்கள் இருப்பதை கண்டவுடன் அவற்றை நெருங்காமல், 0113818609 எனும் இலக்கத்துடனோ அல்லது 0112434351 எனும் இலக்கத்துடனோ உடன் தொடர்பு கொள்ளுமாறும் இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

0 Responses to தரைமட்டமானது கொஸ்கம இராணுவ முகாம்!