Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடற்புலிகளின் மகளிர் பிரிவுத் தளபதி என்று குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த பகீரதி முருகேசு, சட்டமா அதிபரின் பரிந்துரையின் பேரில், அவருக்கு எதிரான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், நீதிமன்றத்தின் பொறுப்புக்கு எடுக்கப்பட்ட பகீரதியின் கடவுச்சீட்டையும், அவரிடமே வழங்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல, நேற்று புதன்கிழமை நீதிமன்ற பதிவாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதியன்று, பிரான்ஸிலிருந்து இலங்கை வந்தபோது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பகீரதி முருகேசு கைது செய்யப்பட்டிருந்தார்.

1991ஆம் ஆண்டில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பயிற்சி பெற்ற பகீரதி, 1996இல் கடற்புலிகளின் மகளிர் பிரிவின் தலைவியாக நியமிக்கப்ட்டாரென, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

0 Responses to கடற்புலி தளபதி என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பகீரதி விடுதலை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com