Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மீள்குடியேற்றத்திற்கு தயாராக உள்ள மக்களுக்கான வீட்டுத் திட்டங்களை செயற்படுத்தப்படும் போது பயனாளிகளை சிரமப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, “இடம்பெயர்ந்த நிலையிலுள்ள மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களிலான வீடுகளை வழங்கும்போது, அம் மக்களை பெரிதும் சிரமங்களுக்கு உட்படுத்தக்கூடிய நடைமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

சில இறுக்கமான நடைமுறைகள் காரணமாக உரிய பயனாளிகள் பலர் தங்களுக்கான வீடுகளைப் பெறுவதில் இழுத்தடிப்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அத்துடன், இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிக் கொண்டிருக்கும் அகதி மக்களுக்கு வீடுகளை வழங்குவதிலும் இழுத்தடிப்பு நிலை சில பகுதிகளில் இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகிறது. இவ்வாறான நிலைமைகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

இடம் பெயர்ந்த மக்கள் எனும் போது, இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் மக்களும் அதில் உள்ளடங்குகின்றவர்களே என்பதை அவதானத்தில் கொண்டு, இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை வழங்கும்போது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். எனவே, இவ்விடயங்களை அவதானத்தில் கொண்டு அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.” என்றுள்ளார்.

0 Responses to வீட்டுத் திட்டங்களின் போது பயனாளிகளை சிரமப்படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும்: டக்ளஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com