ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் சமர்ப்பிப்பதற்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடுவார்கள் என்று அந்தக் கட்சியின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலகுவாகச் செய்யக்கூடிய கைதிகள் விடுவிப்பு, காணிகள் விடுவிப்பைக் கூட இலங்கை அரசாங்கம் செய்து முடிக்கவில்லை என்பதை இந்தச் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துக் கூறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 32வது கூட்டத்தொடர் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த மாதம் முதலாம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
இலங்கை தொடர்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற 29 ஆவது கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன் முன்னேற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் 32ஆவது கூட்டத்தொடரின்போது வாய்மொழிமூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இந்தக் கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் வாய்மொழிமூல அறிக்கையை, எதிர்வரும் 29ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளார்.
இதற்கு முன்னர் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருடனும், ஐக்கிய நாடுகள் உறுப்பு நாடுகளின் முக்கியஸ்தர்களுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் பேச்சு நடத்தவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு நடைமுறையில் என்ன நடந்துள்ளது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதன்போது சுட்டிக்காட்டவுள்ளது.
"இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் குறிப்பிடுவோம். அதேவேளை, இலகுவாகச் செய்யக்கூடிய கைதிகள் விடுவிப்பு, காணிகள் விடுவிப்பு என்பன நடைபெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுவோம். அத்துடன், இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை அரசு மீது அழுத்தம் பிரயோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று எம்.ஏ.சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஐ.நா. வாய்மூல அறிக்கைக்கு முன் சையிட் அல் ஹூசைனை கூட்டமைப்பு சந்திக்கும்: எம்.ஏ.சுமந்திரன்