குத்துச்சண்டை ஜாம்பவானான முஹமது அலி, தன்னுடைய 74வது வயதில் காலமானார்.
உலகின் முன்னாள் அதிபாரக் குத்துச்சண்டை சம்பியனும், உலகின் நன்கு அறியப்பட்டுள்ள விளையாட்டு வீரரான அலி, ஐக்கிய அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்திலுள்ள ஃபோனிக்ஸ் நகரத்திலுள்ள வைத்தியசாலையில், இவ்வார ஆரம்பத்தில், அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.
சுவாசம் தொடர்பான நோய்களோடு போராடிக் கொண்டிருந்த அலியின் நிலைமை, பார்க்கின்ஸன் நோயால் மேலும் மோசமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முஹமது அலியின் இறுதிக் கிரியைகள், அவரது சொந்த நகரமான, கென்டக்கி மாநிலத்திலுள்ள லூய்வேயிலில் நடைபெறவுள்ளதாக அவரது குடும்பம் தெரிவித்துள்ளது.
1960ஆம் ஆண்டு ரோமில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், மென்-அதிபாரப் பிரிவில் தங்கப்பதக்கத்தை அலி வென்றதையடுத்து, அவரின் புகழ் பரவியிருந்தது. 1981ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அலி, தனது 61 மோதல்களில் 56இல் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to குத்துச்சண்டை ஜாம்பவான் முஹமது அலி காலமானார்!