Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மதுராவில் கலவரம் நடந்தபோது 24 மணி நேரத்துக்குள் தாம் மதுராவில் இருந்ததாகவும், மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் எங்கிருந்தார் என்றும் பாஜக எம்பி ஹேமமாலினி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவின் எம்பி நடிகை ஹேமமாலினி. இவர் பாஜக சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தேர்வானவர். நேற்று மதுராவில் ஆக்கிரமிப்பை அகற்றும்போது கலவரம் நடைபெற்று காவல்துறை உயரதிகாரிகள் உட்பட 24 பேர் பலியாகி இருக்க,40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நேரத்தில் தமது சமூக வலைத் தளத்தில் தமது புகைப்படங்களை வெளியிட்டுக்கொண்டு இருந்தார் ஹேமமாலினி.

இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தமது புகைப்படங்களை இணையத் தளத்தில் நீக்கி உள்ள ஹேமமாலினி மதுரா சென்று கலவரம் நடைப்பெற்ற இடத்தைப் பார்வையிட்டார். அப்போது தாம் கலவரம் நிகழ்ந்த 24 மணி நேரத்துக்குள் மதுரா வந்த நிலையில், மாநிலத்தின் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஏன் வரவில்லை, அவர் எங்கிருந்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

0 Responses to மதுராவில் கலவரம் நடந்தபோது அகிலேஷ் யாதவ் எங்கிருந்தார்?: ஹேமமாலினி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com