Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள பிரித்தானிய உயரதிகாரிகள் இருவர், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் நிரந்தர செயலாளர் சைமன் மெக் டொனால்ட் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான இங்கிலாந்து நிறுவனத்தின் நிரந்தர செயலாளர் மார்க் லொவ்கொக் ஆகியோரே இலங்கை வந்துள்ளனர்.

பிரித்தானிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்பட்டு வரும் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான முன்னேற்றம் குறித்து கலந்துரையாடும் நோக்கிலே அவர்கள் நாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தநிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை இருவரும் இரா.சம்பந்தனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

0 Responses to சம்பந்தனுக்கும் பிரித்தானிய உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com