Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மிக மோசமான இடப்பெயர்வுகளையும் பாதிப்புக்களையும் எதிர்நோக்கியவர்கள் வடக்கு மக்கள் அந்த வகையில், இடப்பெயர்வுகளின் வலிகளை பற்றி எமக்கு நன்றாக தெரியும்.

குறித்த இராணுவ முகாம் அமைக்கப்பட்ட பொழுது அந்தப் பகுதிக்கு பொறுப்பாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன இராணுவ முகாம் அமைக்க வேண்டாமென எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது இவ்வாறு இருக்கும் போது, வட மாகாணத்தில் பொது மக்களின் மத்தியில் எத்தனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இராணுவ முகாம்களில் வெடி பொருட்கள் இருக்குமென்பது தவிர்க்க முடியாதவை. பாரிய வெடி பொருட்கள் களஞ்சியப்படுத்தும் பகுதி இல்லா விட்டாலும், துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் என்பன இருக்கின்றன. இந்த முகாம்களுக்குள் ஏதாவது வெடி சம்பவங்கள் நடைபெற்றால், எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள். வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றுமாறு கூறிய போது, தினேஸ் குணவர்த்தன மற்றும் அரசாங்கம் முழுமையாக எதிர்க்கின்றனர்.

இந்த சம்பவத்தின் பின்னரேனும், மக்கள் மத்தியில் இராணுவ முகாம்கள் இருக்க கூடாது என அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டுமென்பதுடன், தமிழ் மக்கள் மத்தியிலுள்ள நூற்றுக்கணக்கான இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு, மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு அவை மாற்றப்பட வேண்டும் என்பதனை அரசாங்கம் நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மக்களின் தலைமைத்துவங்களும் இந்த விடயத்தினை வலியுறுத்த வேண்டும்.

ஒரு இராணுவ முகாமினால் இவ்வாறான பாரிய பிரச்சினைகளை உருவாக்க முடியுமென்றால், வடபகுதியில் நூற்றுக்கணக்கான முகாம்கள் இருக்கின்றன. அந்த முகாம்களினால், எவ்வளவு பெரிய அனர்த்தம் ஏற்படக் கூடும். எனவே, தினேஸ் குணவர்த்தன போன்று இனவாதம் பேசக் கூடியவர்கள், சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புத் தான் தமிழ் மக்களுக்கும் ஏற்படுமென்பதனை உணர்ந்து, வடபகுதியில் உள்ள இராணுவ முகாம்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டுமென்பதனை வலியுறுத்துகின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்: சுரேஷ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com