தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்ட யோசனைகளின் அடிப்படையில் மூன்று உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம், சமூக, பொருளாதார வலுவூட்டலிற்கான உபகுழு, கலை மற்றும் கலாசாரத்திற்கான உபகுழு, சர்வதேச விசாரணைக்கான பொறுப்புக்கூறல் உபகுழு ஆகியவே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இதில் கலை, கலாசாரத்திற்கான உபகுழுவின் இணைப்பாளர்களாக சின்மயா மிஷனின் ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள், திருமறைக்கலாமன்ற ஸ்தாபகர் அருட்தந்தை மரிய சேவியர், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரில் ஒருவரான ரீ.வசந்தராஜா மற்றும் வைத்திய நிபுணர் பிரேம் கிருஷ்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமூக பொருளாதார வலுவூட்டலிற்கான உபகுழு இணைப்பாளராக யாழ். பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ச.சிவநாதன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமிர்தலிங்கம் மற்றும் வைத்திய நிபுணர் கருணாகரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், சர்வதேச விசாரணைக்கான பொறுப்புக்கூறல் சட்டதரணியாக ந.காண்டீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

0 Responses to சமூக, பொருளாதாரம் உள்ளிட்ட மூன்று உப குழுக்களை தமிழ் மக்கள் பேரவை நியமித்துள்ளது!