Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கைக் கிரிக்கெட் அணி மீது 2009ஆம் ஆண்டு தாக்குதல் நடத்திய ஆயுததாரிகளில், 4 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் அறிவித்துள்ளனர். 

மனாவ என்ற பிரதேசத்தில் பொலிஸாருக்கும்- ஆயுததாரிகளுக்கும்  இடையில் இடம்பெற்ற மோதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 7 ஆயுததாரிகள் பொலிஸாருடன் மோதியதாகவும் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது இடம்பெற்ற தாக்குதலில் 9 பேர் காயமடைந்திருந்தனர். லாகூர் நகரில் உள்ள கடாபி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவிருந்த போட்டியில் பங்கேற்கச் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

0 Responses to இலங்கைக் கிரிக்கெட் அணி மீதான தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com