Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்போ, வேறு விதமான தலையீடுகளோ இருக்காது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மங்கள சரமவீர மேலும் கூறியுள்ளதாவது, “இறுதி மோதல்களுக்குப் பின்னரான விடயங்களில் இலங்கை அர்ப்பணிப்புடன் செயலாற்றியதாக சர்வதேச அமைப்புகளும் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளும் ஏற்றுள்ளன. பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையும் ஆதவாகவுள்ளது.

போரின் போது காணாமற்போகச் செய்யப்பட்டனர் முறைப்பாடு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் தொடர்பில் விசாரிக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. போரின் இறுதியில் இடம்பெற்றவை தொடர்பில் அறிவதற்கான உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கான சட்டமூலம் வரும் ஒக்ரோபரில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். தவறின் ஜனவரியில் சமர்ப்பிக்கப்படும். மேலும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியவும் தகவல்களை திரட்டவும் நாடு முழுவதும் அமர்வுகள் நடத்தப்படவுள்ளன.” என்றுள்ளார்.

0 Responses to போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச தலையீடுகள் இருக்காது: மங்கள சமரவீர

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com