Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் காணாமற்போனோரின் உறவினர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கு வடக்கு மாகாண உறுப்பினர்கள் சிலரும், பொது அமைப்புக்களும், காணாமற்போனோரின் உறவினர்களும் தீர்மானித்துள்ளனர்.

குறித்த அமைப்பினை ஸ்தாபிப்பதற்காக மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதில் வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், நீர்ப்பாசன துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம், மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் அடங்குகின்றனர்.

காணாமற்போனவர்கள் தொடர்பாக வடக்கு மாகாண சபையின் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகிய என்.கே. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர்கள் தலைமையில் நடாத்தப்பட்ட விசேட கூட்டம் நேற்று வியாழக்கிழமை யாழ் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்றது.  அதிலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவுகள் தொடர்பில் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளதாவது,  “போருக்கு பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பாக ஆராயும் போது சிங்கள மனித உரிமை அமைப்புகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் பல ஆதரவுகளை தந்துள்ளன. எனினும், இது ஆட்சி மாற்றத்திற்காக தந்த ஆதரவே தவிர எமது தீர்வுக்கான ஆதரவு அல்ல.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், காணாமற்போனவர்கள் விடயங்கள் தொடர்பில் மிக தெளிவான ஒரு தீர்வினை பெற்றுத்தர எல்லா நாடுகளுடன் கதைக்கின்றார். ஐ.நா சபையுடனும் கதைக்கின்றார்.  இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் காணாமற்போனவர்களின் உறவினர்களை ஒன்று திரட்டவேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.  இதற்கு மக்களிடம் இருந்து ஒரு தலைமைத்துவத்தினை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் காணாமற்போனவர்களின் உறவுகளுக்காக சங்கம் ஒன்றை அமைக்க எதிர்பார்த்துள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கில் காணாமற்போனோரின் உறவினர்களை ஒன்றிணைக்கும் அமைப்பொன்றை ஸ்தாபிக்க தீர்மானம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com