புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு வடக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களின் சர்வதேச நாடுகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் அவசியமான ஆவணங்களை சான்றுறுதிப்படுத்துதல், வெளிநாடுகளில் உள்ளவர்களின் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றை பதிவு செய்தல், கடவுச்சீட்டுத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான நடமாடும் சேவையை யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மங்கள சமரவீர கூறியுள்ளதாவது, “வெளிவிவகாரம் சம்பந்தப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு வசதியாக அலுவலகம் ஒன்றை வவுனியாவில் அமைப்பதற்கு நாங்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளோம். இதனை யாழ்ப்பாணத்தில் அமைக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும், யாழ்ப்பாணத்திலும் பார்க்க வவுனியா ஒரு மத்திய இடமாக அமைந்திருப்பதாக நாங்கள் கருதுகின்றோம். இதன் மூலம் மக்கள் நீண்ட தொலைவில் உள்ள கொழும்புக்கு பெருமளவு நேரத்தையும், பணத்தையும் இனிமேல் செலவு செய்து போய் வர வேண்டிய அவசியம் ஏற்படாது.” என்றுள்ளார்.
பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத் திருவிழாவுக்காக புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் உள்ளிட்ட பெருமளவு மக்கள் ஒன்று கூடுவதை முன்னிட்டு வெளிவிவகார அமைச்சின் இந்த நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. வரும் 31ஆம் திகதி வரையிலான நான்கு நாட்கள் இந்த நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் மங்கள சமரவீர இடம்பெயர்ந்து முகாம்களில் வசிக்கின்ற காணியற்ற குடும்பங்களுக்கு குடியிருப்பு காணிகளுக்கான பத்திரங்களை வழங்கியதுடன், அடுத்த மாதமளவில் அந்தக் காணிகளில் வீடுகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருக்கின்றார்.
அங்கு அவர் தெரிவித்துள்ளதாவது, “புதிய இலங்கையை உருவாக்குவதற்கான ஜனநாயகம், நல்லிணக்கம், அபிவிருத்தி ஆகிய மூன்று துறைகளில் அரசாங்கம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த 18 மாத காலத்தில் அரசாங்கம் ஜனநாயகத்தை உறுதி செய்துள்ளது. கடத்தப்படுவோம், கொல்லப்படுவோம் என்ற அச்சமின்றி செய்தியாளர்கள் இன்று சுதந்திரமாகச் செயல்பட முடியும். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக பல்லின மக்களும் நாட்டில் சுதந்திரமாக வாழக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு வடக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மங்கள சமரவீர