மென் வலுவின் பரவலாக்கம் தேசிய வலிமையைப் பேணுவதற்கான முக்கியமான காரணியாகும் என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
உலகில் வன் வலுவில் எதிர்விளைவுகள் அதிகரித்துள்ளதை அடுத்து, மென் வலு மற்றும் அதன் தாக்கம் அண்மைய நாட்களில் அதீதமாக உணரப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2016' இல் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றுகையில் கருணாசேன ஹெட்டியாராச்சி இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மென் வலு மற்றும் உலகளாவிய ரீதியில் அதன் தாக்கம் தொடர்பில் 6வது பாதுகாப்பு மாநாட்டில் இம்முறை ஆராய்கின்றோம். மென் வலுவின் வலியுறுத்தல் அல்லது ஈர்ப்பு மூலம் மற்றவர்களின் நடவடிக்கைகளின் தாக்கம் என்பன தொடர்பில் தகவல் மற்றும் சிந்தனைக்கான பரிமாற்றங்களுக்கு இது உதவியாக அமையும். ” என்றுள்ளார்.

0 Responses to மென் வலுவின் பரவலாக்கம் தேசிய வலிமைக்கான முக்கிய காரணியாகும்: கருணாசேன ஹெட்டியாராச்சி