வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
யாழ். மத்திய கல்லூரியின் 200வது ஆண்டு விழாவில் (நேற்று வெள்ளிக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “இரணைமடுக்குளம் புனரமைப்புப் பணிகளில், சுற்றாடல் அதிகார சபை, கனிய வளங்கள் திணைக்களங்கள் உள்ளிட்ட திணைக்களங்கள் தடைகளை ஏற்படுத்துகின்றன. இதனால், குளத்தை புனரமைப்புச் செய்ய முடியாதுள்ளது. வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி கரிசனை எடுத்து, இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
மேற்கண்ட கோரிக்கைக்கு தன்னுடைய உரையில் பதிலளித்துப் பேசிய ஜனாதிபதி, ''அபிவிருத்தி தடைகளை நிவர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன். அபிவிருத்திப் பணிகளுக்கு ஒருவரும் தடைகளை ஏற்படுத்தக்கூடாது. அதனால், வறுமையையும் ஏழ்மையும் தான் ஏற்படும். அனைவரும் போராட வேண்டும். அதற்காக துப்பாக்கி ஏந்திப் போராடுவது என்று அல்ல. அபிவிருத்தியை நிலை நாட்டுவதற்காக அனைவரும் அதனை நோக்கியதாக போராட வேண்டும். வடக்கில், மீன்பிடி, விவசாயம் முக்கிய தொழில்களாக காணப்படுகின்றன. அவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலைமைய நான் நன்கு உணர்வேன்” என்றுள்ளார்.

0 Responses to வடக்கில் காணப்படும் அபிவிருத்திக்கான தடைகள் நீக்கப்படும்: மைத்திரிபால சிறிசேன