ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேசத்தின் ஒத்துழைப்பினை இலங்கை தொடர்ந்தும் எதிர்பார்த்திருப்பதாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 33வது கூட்டத் தொடர்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரவிநாத ஆரியசிங்க கூறியுள்ளதாவது, “சில இனவாத சக்திகள் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பல சவால்களை அரசாங்கம் எதிர்கொண்டுள்ள போதிலும், உண்மை, நீதி போன்றவற்றை உறுதிப்படுத்தி வருகின்றது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த, பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் அமைப்பின் குழுவினரின் (இலங்கை விஜயம் குறித்த) அறிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையின் சில பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்கனவே அமுல்படுத்த ஆரம்பித்துள்ளது. காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தகவல் அறியும் சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to சர்வதேசத்தின் ஒத்துழைப்பினை இலங்கை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றது: ரவிநாத ஆரியசிங்க