எந்தவொரு நபரும் ஏனையோரிலும் பார்க்க மிக விசேட சலுகைகளை கொண்டவர்களாகவோ, எந்தவொரு தொழிலைச் சார்ந்தவர்களும் ஏனைய தொழில் சார்ந்தவர்களிலும் பார்க்க விசேட சலுகைகளை கொண்ட தொழிலை புரிபவர்களாகவோ தாம் கருதவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட ஒரு தொழிலை மேற்கொள்கின்றவர்கள் ஏனையவர்களை விட முன்னுரிமைகளை எதிர்பார்ப்பதை தாம் முற்றாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர், "எந்தவொரு நபரும் ஏனையோரிலும் பார்க்க மிக விசேட சலுகைகளை கொண்டவர்களாகவோ, எந்தவொரு தொழிலைச் சார்ந்தவர்களும் ஏனைய தொழில் சார்ந்தவர்களிலும் பார்க்க விசேட சலுகைகளை கொண்ட தொழிலை புரிபவர்களாகவோ நாம் கருதவில்லை. ஆயினும், தொழில்சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பது, தொழில்சார்ந்த உரிமைகளை வழங்குவது மற்றும் இந்நாட்டில் வரி செலுத்தும் மக்களுக்கு உச்ச சேவையை உரிய முறையில் வழங்குவது தொடர்பில் நாம் முன்னுரிமை வழங்குவோம்.” என்றுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த வைத்தியர்கள், தங்கள் குழந்தைகளுக்கு பிரபல பாடசாலைகளில் இடம் தருமாறு கோரி அடையாள வேலை நிறுத்தமொன்றை மேற்கொண்டிருந்தனர். அந்த நிலையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to அனைத்துத் தொழிற்துறையினரும் சமமானவர்களே; தனிப் பிரிவினருக்கு விசேட சலுகைகள் கிடையாது: ரணில்