பொலிஸ் துறை மக்களின் பாதுகாப்புக்கும், சேவைக்குமானது. மாறாக, அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்கானது அல்ல என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சில அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்காக பொலிஸாரை பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் காணப்பட்டன. சில பொலிஸார் அரசியல்வாதிகளுடன் நெருங்கி செயற்படுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பொலிஸின் 150வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற பிரதான நிகழ்வில் தலைமையேற்று உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளாவது, “பொலிஸார் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொதுமக்களுக்காக முன்னின்று செயற்பட வேண்டுமென்றே நான் எண்ணுகின்றேன். பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் மற்றும் நீதியை பாதுகாப்பது பொலிஸாரின் முக்கிய பொறுப்பாகும். சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கு அப்பால் சென்று மனிதநேயமிக்க செயற்பாடாக நான் அதனை கருதுகின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to பொலிஸ் மக்களுக்கானது; அரசியல்வாதிகளுக்கானது அல்ல: மைத்திரிபால சிறிசேன