Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மூன்று மாதங்களுக்குள் வலிகாமம் வடக்கு மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற அரசாங்கம் தவறின், அத்துமீறி மீள்குடியேறுவோம் என்று வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும், வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற ஒன்றியமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாவது, “கடந்த டிசம்பர் மாதம் நலன்புரி முகாமுக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வலிகாமம் வடக்கு மக்களை ஆறு மாத காலத்திற்குள் மீள்குடியேற்றம் செய்வேன் என வாக்குறுதி அளித்தார்.

ஆனால்,  அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தற்போது ஐந்து இடங்களை கையளிக்கமுடியாது எனக்கூறப்பட்டுள்ளது. அத்துடன் மீளக்குடியேற்றப்படவுள்ள மக்களுக்கு 2 பரப்பு காணியும் கவர்ச்சியான சலுகைகளும் நட்டஈடுகளும் தருவதாக கூறுகின்றனர்.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் யாழ்ப்பாணம் வந்தபோது மீளக்குடியேற்றப்படவேண்டிய மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயினும், பான் கீ மூன் மக்களை கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டார்.

எனவே இனியும் அரசியல்வாதிகளை நம்ப தயாரில்லை. நாம் எமது சொந்த மண்ணுக்கு செல்வதாக தீர்மானித்துள்ளோம். பலாலி அந்தோனியார் ஆலய எல்லைக்குள் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு அங்கு கொட்டகைகள் அமைத்து குடியேறுவதென தீர்மானித்துள்ளோம்.

எனவே, எமது இந்த செயற்பாட்டிற்கு மீள்குடியேற்ற மக்கள் சார்பில் இயங்கும்அமைப்புகள், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் உட்பட பொதுமக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to மூன்று மாத கால அவகாசம் மீறினால் அத்துமீறி மீள்குடியேறுவோம்; வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற ஒன்றியம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com