எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தனது ‘கை’ சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் 65வது தேசிய மாநாடு கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் குருணாகலில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. அங்கு பேசும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியை ஆட்சியமைக்கும் கட்சியாக கொண்டு செல்லும் பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்றை மாநாட்டில் சுதந்திரக் கட்சியின் போசகரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து கொண்டிருந்தார். ஆனாலும், இன்னொரு போசகரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டிருக்கவில்லை.

0 Responses to எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ‘கை’ சின்னத்தில் போட்டி: ஜனாதிபதி