இலங்கையின் உள்ளக பொருளாதாரத்தில் அமெரிக்காவும், இந்தியாவும் அதீத தலையீடுகளை மேற்கொள்கின்றமை நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலானது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தமானது (எட்கா- ETCA) நாட்டு மக்களின் ஆணையை மீறி கொண்டு வரப்பட்டால் பாரிய சவால்களையே எதிர் கொள்ள நேரிடும். ஆகவே, அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான பொருளாதாரத்தை மையப்படுத்திய ஒப்பந்தங்களை அரசாங்கம் மறுபரிசீலணை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே ஜீ.எல். பீரிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்தியாவுடனான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தினை (எட்கா- ETCA) கைச்சாத்திடும் எதிர்பார்ப்புடன் அரசாங்கம் செயற்படுகின்றது. பொருட்கள் கொள்வனவில் மாத்திரம் இதுவரைக் காலமும் இருந்த இந்தியா தற்போது சேவை துறையை நோக்கி வியாபிக்கின்றது.
இதனால் உள்ளூர் பொறியியல் உள்ளிட்ட பல துறைகளின் தரம் கேள்விக்குறியாவதுடன் இலங்கையர்களுக்கு தொழிலின்மையும் ஏற்பட போகின்றது. 30 ஆயிரம் பட்டதாரிகள் இதுவரையில் நாட்டில் உள்ளனர். எட்கா ஒப்பந்தம் ஊடாக இலங்கை இந்தியாவின் பொருளாதார பிராந்தியமாகும் நிலையே காணப்படுகின்றது. இதற்கு முன்னர் இந்தியாவுடன் செய்துக் கொள்ளப்பட்ட சுதந்திர பொருளாதார ஒப்பந்தங்களில் இலங்கை பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்த்தினால் எவ்விதமான நன்மையும் இலங்கைக்கு கிடையாது. மாறாக இந்தியா முழு அளவில் பலனை அடைகின்றது.
உள் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தியாவின் அவசர சிகிச்சை சேவை தென் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்ன? இரகசிய தகவல்களை திருடும் பொருட்டே இவ்வாறான சேவைகளை இலங்கையில் அறிமுகம் செய்கின்றனர். இவ்வாறானதொரு நிலையில் மற்றுமொரு ஆபத்தான ஒப்பந்தத்தை செய்துக் கொள்வதன ஊடாக நிலைமை மோசமடையும்.
அத்தோடு, உள் நாட்டு இறைவரி தினைக்களத்தின் வரி சேகரிப்பு பிரிவை அமெரிக்காவின் மெகன்ஸி என்ற நிறுவனத்திற்கு கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது மிகவும் ஆபத்தான விடயமாகும். உள் நாட்டு பாதுகாப்பு மற்றும் அரச இரகசியங்கள் வெளிநாடுகளுக்கு தெரிய கூடிய நிலையே இதில் காணப்படுகின்றது. இதனால் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையின் உள்ளக பொருளாதாரத்தில் அமெரிக்க- இந்திய தலையீடுகள் அச்சுறுத்தலானவை: ஜீ.எல்.பீரிஸ்