ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 29 ஆண்டுகளுக்கு முன்னர் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி திலீபனுக்கு (இராசையா பார்த்தீபன்) நல்லூர் வீதியில் இன்று வியாழக்கிழமை தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரான திலீபன், “மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும், சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்” என்கிற விடயங்கள் அடங்கிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராடத்தினை, 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி ஆரம்பித்திருந்தார். பன்னிரண்டு நாட்கள் நீடித்த அவரது உண்ணாவிரதம் 1987 செப்டம்பர் 26, அவரது மரணத்தோடு நிறைவுக்கு வந்தது.
இன்றைக்கு திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த 29வது வருட நிறைவாகும். அந்த நிலையிலேயே, ஜனநாயகக் போராளிகள் கட்சி உறுப்பினர்களினால் இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

0 Responses to தியாக திலீபனுக்கு நல்லூரில் அஞ்சலி!