ராம்குமாரின் பிரேத பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, வழக்கின் விசாரணை வேறு அமர்வுக்கு மற்றம் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சுவாதி கொலை வழக்கில் கொலையாளி என்று கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்த ராம்குமார், நேற்று முன்தினம் தற்கொலை செய்துக்கொண்டார் என்று கூறப்பட்டது. ஆனால், இது தற்கொலையல்ல கொலைதான் என்று ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தொடுத்திருந்தார். அந்த மனுவில், ராம்குமாரின் பெற்றோர் தரப்பில், தங்களை மகனின் உடலை பிரேத பரிசோதனை செய்தால், தங்கள் தரப்பு மருத்துவ நிபுணரும் பிரதே பரிசோதனை மருத்துவர்கள் குழுவில் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாக ராம்குமாரின் வழக்கறிஞர் தமது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், ராம்குமார் பெற்றோர் தரப்பு மனுவுக்கு, அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு நீதிபதிகள் விசாரணையை மாற்றி அமைத்த நிலையில், ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

0 Responses to ராம்குமாரின் பிரேத பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!