Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசாங்கத்தின் கீழ் நாட்டு மக்களின் சுதந்திரமும், ஜனநாயகமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வந்துள்ள  ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.  இதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இலங்கையின் மேலதிக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்க முடியுமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாகவும் பான் கீ மூன் கூறியுள்ளார்.

இம்மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத் தொடரில் சர்வதேச சமூகத்துடன் உள்ள உறவுகளை மேலும் முன்னேற்றமடையச் செய்வதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது என்று நம்பிக்கையுடனான எதிர்பார்ப்பு தனக்கு தோன்றியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

0 Responses to புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் சுதந்திரமும் ஜனநாயகமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: பான் கீ மூன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com