Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த மகிந்த ராஜபக்சே மலேசிய மண்ணில் காலடி எடுத்து வைப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று இன்று புத்ரா வணிக மையத்தில் திரண்ட மலேசியத் தமிழர்கள் பலர் வலியுறுத்தினர்.

கிட்டத்தட்ட 60 ஆயிரத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்களின் மரணத்திற்குக் காரணமான ராஜபக்சேயை மலேசியத் தமிழர்கள் உள்பட உலகத் தமிழர்கள் மன்னிக்கவே மாட்டார்கள். பல்லாயிரக் கணக்கான தமிழர்களுக்கு எதிராக நடத்திய இன அழிப்புக்கு ராஜபக்சே பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

மேலும், ராஜபக்சே ஒரு நடமாடும் நரகாசூரன்’ என்று அவர்கள் ஆவேசத்துடன் சாடினர்.

புத்ரா உலக வணிக மையத்தில் நடைபெறும் ஆசிய-பசிபிக் வட்டார நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டை முன்னிட்டு இலங்கை எதிர்க்கட்சி எம்.பி.களின் குழுவுக்கு தலைமையேற்றுவரும் ராஜபக்சேயின் கோலாலம்பூர் வருகையை எதிர்த்து மலேசியத் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு ராஜபக்சேயின் கொடும்பாவியையும் எரித்தனர்.





0 Responses to நடமாடும் நரகாசூரன் ராஜபக்சே! மலேசிய தமிழர்கள் போராட்டம்! (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com