உடலும் மனமும் வலிமை பெற்று தமிழக மக்களுக்காக சிறப்பாக பணியாற்றுவேன் என்று திமுக. முப்பெரும் விழாவில் திமுக தலைவர் கருணாநிதி பேசியுள்ளார்.
நான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிப் பணி ஆற்றி வருகிறேன். ஆற்ற வேண்டிய தொண்டை ஆற்றுவேன். தொடர்ந்து இயக்கத்தை கட்டிக் காப்பேன். பல இழப்புகளையும் தாண்டி இந்த இயக்கத்தை தொண்டர்கள் கட்டிக் காத்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்றத்தில் நாம் குரல் எழுப்பியிருக்கிறோம். தொடர்ந்து கட்சியை வளர்க்க அனைவரும் பாடுபடவேண்டும்.என்று கருணாநிதி உரையாற்றினார்.
மேலும், பெரியாரின் எண்ணங்கள், அண்ணாவின் கொள்கைகள் என்றைக்கும் இந்த இயக்கத்தை வழிநடத்தும். நாம் தோல்வியை சந்தித்து இருந்தாலும் அடுத்த வெற்றியை நோக்கி பயணிக்க இருக்கிறோம். நீ பெரியவனா, நான் பெரியவனா? என்ற குழப்பங்களை தவிர்த்து அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும்.என்று கூறினார்.
அப்போது,உடலும் மனமும் வலிமை பெற்று தமிழக மக்களுக்காக சிறப்பாக பணியாற்றுவேன். தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது என்ற அளவுக்கு அனைத்து பணிகளையும் முடிப்பேன். என்று நம்பிக்கையுடன் உரையாற்றினார் கருணாநிதி.

0 Responses to உடலும் மனமும் வலிமை பெற்று தமிழக மக்களுக்காக சிறப்பாக பணியாற்றுவேன்: தி மு.க. முப்பெரும் விழாவில் கருணாநிதி!